கொல்லங்குடி பள்ளியில் கழிவுநீர் குப்பையால் தொற்றுநோய் பரவும் அபாயம் !

19 February 2025

சிவகங்கை மாவட்டம், காளையார் கோயில் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொல்லங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், சுற்றியுள்ள வளாகத்திற்கு உள்ளே கழிவு நீரும் குப்பைகளும் நிரம்பி காணப்படுகின்றன. இந்தப் பள்ளியில் சுற்றி உள்ள கிராமப்புறத்தில் இருந்து 70 குழந்தைகள் படித்து வருகின்றனர்.


இந்தப் பள்ளியில் கழிவு நீர் மற்றும் குப்பைகள் பரவி மாணவர்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதனால், கல்வி மற்றும் சுகாதாரத்தில் பிரச்சினைகள் உருவாகின்றன.

 குறிப்பாக பள்ளிக்கு வெளியே இருக்கும் இரண்டு குப்பை தொட்டியில் சுற்றியுள்ள பொதுமக்கள் கடை நடத்துபவர்கள் குப்பைகளை கொட்டுவதன் மூலம் துர்நாற்றமும் ஏற்படுகின்ற இதனால் அந்த குப்பை தொட்டிகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.  

 பள்ளிகளில் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

இந்த பள்ளியில் இதுபோன்ற ஏராளமான பிரச்சனைகளை அதிகாரிகளிடம் பலமுறை கொண்டு சென்றாலும். 
வெறும் மேற்பார்வை மட்டும் செய்துவிட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிவிட்டு செய்கின்றனர். 

ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இது போன்று பள்ளிகளில் நடக்கும் பிரச்சனைகளை அதிகாரிகள் கண்டும் காணாதது போல் இருக்கும் நிலை வருத்தம் அளிக்கிறது. 

செய்தியாளர்:-
சிவபிரசாத்.கா