சிவகங்கையில் தீ விபத்து!!
05 March 2025
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள மேலப் பட்டி சமுதாயக்கூடத்தில், 5 டன் எடை கொண்ட 25 கிலோ பிளீச்சிங் பவுடர் 200 மூட்டைகள் திடீரென எரிந்து சேதமடைந்துள்ளதற்கான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று நடந்தது.
சமுதாயக்கூடத்தில் இருந்து புகை பரவும்போது, கிராமத்தினர் உடனடியாக சிங்கம்புணரி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்புத் துறையினர் வந்தபோது, பிளீச்சிங் பவுடர் கொண்ட சாக்கு மூட்டைகள் ஏற்கனவே எரிந்துவிட்டன. அதன் காரணமாக வெப்பம் அதிகமாகி உள்ளே உள்ள பல பொருட்கள் சேதமடைந்தன.
இவர்களைத் தொடர்ந்து, தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் பிரகாஷ் மற்றும் அவரது வீரர்கள் அங்கு வந்து, தீயை அணைக்க தண்ணீர் போட்டு களத்தில் தீயை அணைத்தனர்.
இந்த விபத்து காரணமாக பொருட்கள் சேதமடைந்தது, ஆனால் தீயணைப்புத் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மேலும் சேதம் ஏற்படாமல் தடுக்க செய்துள்ளனர்.
செய்தியாளர்:- சிவபிரசாத்.கா