" இளம்பெண் தூக்கில் தொங்கியபடி சடலம் மீட்பு "

06 March 2025

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை அருகே 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் கிடப்பதாக கௌரிப்பட்டி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கிடைத்தது. 

அதன் அடிப்படையில் சிவகங்கை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா போலீசார், அழுகிய நிலையில் தூக்கில் தொங்கிய பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, பெண் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்:-
சிவப்பிரசாத்.கா