காரைக்குடி: இருசக்கர வாகன திருட்டு - 12 வாகனங்களை கைப்பற்றி திருடனை பிடித்த காவல் துறையினர்!!

25 February 2025


சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகரில் பல பகுதிகளில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் காணாமல்போன நிலையில், காரைக்குடி வடக்கு காவல் நிலையத்திற்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து, காரைக்குடி டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில், தனி படை காவல்துறையினர் மற்றும் வடக்கு காவல் உதவி ஆய்வாளர் சார்பில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், திருத்துறைப்பூண்டியை சேர்ந்த ராஜ்குமார் என்ற பிரபல இருசக்கர வாகன திருடனை கண்டுபிடித்தனர். அவனது தொலைபேசி எண்ணை கண்காணித்து, காரைக்குடியில் ஒரு பல்சர் வாகனத்தை திருடி செல்வது அறிந்த காவலர்கள், அவனை சுற்றி வைத்து பிடித்தனர்.

விசாரணையில், காரைக்குடி, புதுக்கோட்டை மற்றும் திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில், திருடிய 8 பல்சர் பைக்குகள், 1 டியோ, 1 அக்டிவா மற்றும் 2 டிவிஎஸ் ஜூபிடர்கள் உள்ளிட்ட மொத்தம் 12 இருசக்கர வாகனங்களை திருடிய மற்றும் விற்பனை செய்தவாறு தெரிய வந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக, காரைக்குடி வடக்கு காவல் நிலையம் வழக்குப் பதிந்து, ராஜ்குமார் மீது சட்ட நடவடிக்கை எடுத்து சிறையில் அடைத்துள்ளனர். 

செய்தியாளர்:-
சிவபிரசாத்.கா