கல்வி , வெற்றி , குறைவில்லா செல்வம் நல்கும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி..!
14 January 2025
வறுமைகளை நீக்கி அனைத்து ஐஸ்வரியங்களையும் அளிப்பதில் இந்த அம்மனுக்கு நிகர் இவரே. இந்த அன்னையை வழிபடுவதற்கு தனியாக விரத முறைகள் இருக்கின்றன.
பார்வதிதேவியின் பல்வேறு வடிவங்களில் ஒன்று ராஜராஜேஸ்வரி அம்மன். ராஜராஜேஸ்வரி அன்னையை ஒரு நல்ல நாளில் தொடங்கி, தொடர்ச்சியாக 48 நாட்கள் விரதம் இருந்து தியானிக்க வேண்டும். இந்த விரத நாட்கள் முழுவதும் பிரம்ம முகூர்த்தம் முடிவதற்கு முன்பாக, அதாவது காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளாக எழுந்து நீராடி அம்மனை வணங்க வேண்டும். ராஜராஜேஸ்வரி அம்மனின் படத்தை பூஜை அறையில் வைத்து, மாலைகள் சூட்டி, தீப, தூப ஆராதனைகள் காட்டி வழிபடலாம்.
இந்த விரத நாட்களில் மாமிசம், மது போன்றவற்றை நீக்கி விடவேண்டும். எந்த வீட்டில் விரதம் இருக்கத் தொடங்குகிறோமோ, அதே வீட்டிலேயே 48 நாட்களும் விரதம் இருக்க வேண்டியது அவசியம். வேறு வீடுகளிலோ, வெளியிலோ சென்று விரதத்தை நிறைவு செய்யக் கூடாது. இரவில் எங்கேயாவது தங்கிவிட்டு வந்தால், விரதம் தடைபட்டுவிடும். மூன்று வேளைகளும் அம்மனுக்கு பூஜை செய்து வணங்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், பில்லி, சூனியம் உள்ளிட்ட மந்திர தந்திரங்கள் எதுவும் நம்மை அண்டாது. விரோதிகளும், துரோகிகளும் விலகுவார்கள். அனைவரும் போற்றக்கூடிய வசிய சக்தி கிடைக்கும். சித்து வேலைகள் கைகூடும். அதிர்ஷ்டத்தையும், ஐஸ்வரியத்தையும் தரும் லட்சுமி தேவி வீட்டின் வாசல் கதவைத் தட்டுவாள். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும். அரசனும் பணியும் தகுதி வந்து சேரும்.
விரதம் எடுக்கும் நாட்களில் அருகில் இருக்கும் ராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் தரிசனம் செய்தால் நல்ல பலனை தரும்.
வினைகள் அனைத்தையும் போக்கி வளம் சுரக்க வழி காட்டும் , ஆசைகளினால் தடுமாறாமல் காப்பவர் இந்த ஸ்ரீராஜராஜேஸ்வரி .
அடுத்ததாக வாசனை மிகுந்த உதிரிப் பூக்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அம்மனுக்கு இரண்டு நெய் தீபங்கள் ஏற்ற வேண்டும். இதை அகல் விளக்கில் ஏற்றக்கூடாது. மா விளக்காக ஏற்ற வேண்டும். தினமும் ஏற்ற வேண்டும். சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் தினமும் ஏற்றுங்கள். இவ்வாறு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு அந்த உதிரிப்பூக்களை வைத்து "ஓம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி போற்றி” என்னும் மந்திரத்தை கூறி 108 முறை அர்ச்சனை செய்யுங்கள்.
வாசனை மிகுந்த மலர்கள் கிடைக்காத பட்சத்தில் குங்குமத்தாலும் அர்ச்சனை செய்யலாம். இப்படி தொடர்ந்து 48 நாட்கள் ராஜராஜேஸ்வரி அம்மனை நினைத்து இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கு கண்டிப்பான முறையில் வேலை தொடர்பான தொழில் தொடர்பான அனைத்து விஷயங்களும் வெற்றிகரமாக நடக்கும். இந்த வழிபாட்டை கணவனுக்காக மனைவியும், குழந்தைகளுக்காக தாயும் தந்தையும் செய்யலாம். உடன் பிறந்தவர்களுக்காகவும் செய்யலாம் , தாய் தந்தைக்காகவும் வழிபடலாம்.
ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மனே வழிபடும் பக்தர்களுக்கு ராஜபோகம், ராஜயோகம் போன்ற அனைத்து வளமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
முழு மனதோடு ராஜராஜேஸ்வரி அம்மனின் திருப்பாதங்களில் சரணாகதி அடைந்து தினமும் அந்த அம்மனின் நாமத்தை கூறி வழிபாடு செய்ய விரைவிலேயே அவர்களின் தொழில் மற்றும் வேலை தொடர்பான அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும்.
குழந்தைகளுக்கு கூர்மையான கல்வி அறிவு பெற்றிட தொடர்ந்து
ஸ்ரீ ராஜராஜேஸ்வரியை வணங்கினால் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோவில்
ராஜபாளையம் ,
விருதுநகர் மாவட்டம்.
தொடர்புக்கு : 72 9965 9966