தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்புகள்..! அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்!!

18 March 2025


2025-2026-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் உரையின் போது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:-

மாநிலத்தில் உள்ள தெரிவு முகமைகளான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். ஆசிரியர் தேர்வு வாரியம். மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஆகியவற்றின் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் வெவ்வேறு அரசுத் துறைகளிலுள்ள காலிப் பணியிடங்களுக்காக இதுவரை 57,016 அரசுப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது தவிர, பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக 21866 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். ஆக மொத்தம் இந்த அரசு பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் 78,882 நபர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 40,000 பணியிடங்களை வரும் நிதி ஆண்டிலேயே நிரப்பும் பொருட்டு உரிய நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது.

அரசு அலுவலர்களுக்கு இந்தக் காப்பீடு உள்ளிட்ட சேவைகளை எதிர்வரும் 2025-26 ஆம் நிதியாண்டு முதல் வழங்கிட முன்வரும் வங்கிகளுடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்வதுடன், குறித்த காலத்திற்குள் இப்பயன்கள் அரசு அலுவலரின் குடும்பங்களுக்குக் கிடைத்திடுவதை தமிழ்நாடு அரசின் கருவூலத் துறை ஒருங்கிணைக்கும். 

150 வகையான அரசு சேவைகளை இணைய வழியில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அரசு ஊழியர்களுக்கு வங்கிகளில் கடன் பெற சலுகைகள் வழங்கப்படும்.அரசு ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈட்டிய விடுப்பு நாள்களுக்கு பணப்பலன் பெறும் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும்.அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பு நாள்களை சரண் செய்து பணப்பலன் பெறலாம். அதன்படி 15 நாள்கள் வரை பணப் பலன் பெறும் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படுகிறது என்று அறிவித்தார்.

கடந்த 4 ஆண்டுகளில் 57,000 அரசுப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்