ஆபாச வீடியோவை இணையதளத்தில் பதிவிடுவதாக கூறி இளம்பெண்ணை மிரட்டியவர் கைது...

28 March 2025

 சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

 கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்கள் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்வதற்கு முன்னுரிமை கொடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *டாக்டர்.இரா.ஸ்டாலின் IPS அவர்கள்* செயல்பட்டு வருகிறார்கள். 

⏺️ இந்நிலையில் தக்கலை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தன்னுடன் நெருங்கி பழகிய நபர் தன்னுடைய ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிடுவதாக கூறி மிரட்டி வருவதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த குற்றவாளியை உடனடியாக கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டார்கள்.

⏺️ உத்தரவின்படி, சைபர் கிரைம் காவல் நிலைய உதவி காவல் கண்காணிப்பாளர் திரு நாகசங்கர் அவர்கள் மேற்பார்வையில், ஆய்வாளர் திருமதி சொர்ண ராணி, உதவி ஆய்வாளர் அஜ்மல் ஜெனிப் அவர்கள் தலைமையில் போலீசார், குற்றவாளியை கைது செய்யும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிடுவதாக கூறி இளம்பெண்ணை மிரட்டிய தக்கலை, பத்மநாபபுரம் பகுதியை சேர்ந்த இப்ராஹிம் என்பவரின் மகன் ஜெயக்குமார் (எ) நாஞ்சில் ஜெயக்குமார்(50) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆசை படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார் .

⏺️ சிறப்பாக செயல்பட்டு குற்றவாளி கைது செய்து சைபர் கிரைம் போலீசாரின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.



செய்தியாளர் 
கேபி.தமிழ்வாணன்
நாகர்கோவில்