அரசு பதவி ரெடி: உற்சாகத்தில் சுரேஷ்ராஜன் ஆதரவாளர்கள்..!
29 March 2025
தமிழக பொது தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு உள்ள நிலையில் திமுகவில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வர திமுக தலைமை தயாராகி வருகிறது.தற்போது எம்எல்ஏ.,க்களாக உள்ள மாவட்ட செயலாளர்கள் மற்றும் மூத்த அமைச்சர்கள், பலருக்கு வரும் தேர்தலில் சீட் கிடைப்பது என்பது கேள்விகுறியாக உள்ளது.
அதேபோல் பதவி இல்லாமல் இருந்தாலும் மக்கள் மத்தியிலும் கட்சியினர் மத்தியிலும் இன்னும் செல்வாக்கு குறையாமல் உள்ள நிர்வாகிகளுக்கு பதவி வழங்க பட்டியல் தயாராகி வருகிறது.
அமைச்சர் இல்லாத குமரி மாவட்டத்திற்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பொறுப்பு அமைச்சராக உள்ளார் . அரசின் முக்கியமான இலாகா அமைச்சரான அவரால் குமரி மாவட்டத்தில் கவனம் செலுத்துவது சிரமமாக உள்ளது.மேலும் அவரது தொகுதியையும் கவனிக்க வேண்டியது இருப்பதால் குமரி மாவட்டத்திற்கு அவரால் அடிக்கடி வரமுடியவில்லை.
இதனால் குமரி மாவட்டத்தில் நன்கு பரிச்சயமான முன்னாள் மூத்த அமைச்சர் சுரேஷ்ராஜனுக்கு மீண்டும் அமைச்சர் அந்தஸ்து கொண்ட வாரிய தலைவர் பதவி வழங்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சட்டமன்ற கூட்ட தொடர் முடிந்ததும் அறிவிப்பு வெளியாகும் என்பதால் கட்சியினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
செய்தியாளர்
கேபி.தமிழ்வாணன்
நாகர்கோவில்