நடிகர் விஜய் மத்திய அரசு ஒய் பாதுகாப்பு பிடியில்..!!
18 February 2025
தமிழக வெற்றி கழக்த்தின் தலைவர் நடிகர் விஜய்க்கு மத்திய அரசு திடீரென Y பிரிவு பாதுகாப்பு அளித்திருப்பது குறித்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றனர். அத்துடன், நடிகர் விஜய், பல்வேறு தரப்பினரை ரகசியமாக சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தார்; இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் Y பிரிவு பாதுகாப்பால் கடுமையாக பாதிக்கும் என்கின்றனர் தவெக நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் தேர்தல் அரசியல் களத்தில் இன்னமும் இறங்காத அரசியல் கட்சி தமிழக வெற்றி கழகம். ஆனால் திடீரென விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கி இருக்கிறது மத்திய அரசு.
நடிகர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கியது குறித்து மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் பெரும் ஆபத்தை எதிர்கொண்டிருக்கிற தலைவர்கள் பலரும் இருக்கும் நிலையில் நடிகர் விஜய்-க்கு ஏன் Y பிரிவு பாதுகாப்பு என்பது அவர்களது கேள்வி.
அத்துடன் நடிகர் விஜய் தரப்பிலும் Y பிரிவு பாதுகாப்பு உத்தரவை அவ்வளவாக ரசிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக தமிழக வெற்றி கழக வட்டாரங்களில் விசாரித்த போது நம்மிடம் பகிர்ந்தவை: பொதுவாக நடிகர் விஜய் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக உளவு பிரிவுகள் கண்காணித்து வந்தன. இந்த நடவடிக்கைகள் சற்று தொலைவில் இருந்துதான் கண்காணிக்கப்பட்டு வந்தன.