இரவு நேரத்தில் வண்டல் மண் எடுத்த 19 டெம்போக்கள் மூன்று ஹிட்டாச்சி எந்திரங்கள் பறிமுதல் - காவல் கண்காணிப்பாளரின் அதிரடி நடவடிக்கை..

28 March 2025

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட நாவல் காடு கிராமத்தில் கல்கட்டு குளம் என்ற மலட்டு குளத்தில் அதிகாலை இரண்டு மணி முதல் காலை 8 மணி வரை திருட்டுத்தனமாக இரு கோஷ்டிகளாக பிரிந்து வண்டல் மண் எடுத்துச் செல்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிரடி உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் பூதப்பாண்டி போலீசார் உதவியுடன் இன்று 28-03-2025 அதிகாலை 3 மணி அளவில் அப்பகுதியில் உள்ள குளங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அதிகாலை 3 மணி அளவில் மேற்படி நாவல் காடு கிராமத்திற்கு உட்பட்ட கல்கட்டு குளம் என்ற மலட்டு குளத்தில் வண்டல் மண் எடுத்துக் கொண்டு இருந்த 19 டெம்போக்கள் மற்றும் மூன்று கனரக ஹிட்டாச்சி எந்திரங்களை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். தற்போது போலீசாரின் கட்டுப்பாட்டில் 19 டெம்போக்களும் 3 கனரக ஹிட்டாச்சி எந்திரங்களும் உள்ளது. அப்பகுதியில் போட்டி குழுக்கள் மூலம் வண்டல் மண் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் இரு குழுக்களாக பிரிந்து வண்டல் மண் எடுக்கப்பட்டு வந்தது. அனுமதி பெற்று வண்டல் மண் எடுப்பவர்கள் காலை 9 மணி முதல் எடுத்து வந்தனர். இரு குழுக்களாக பிரிந்து போட்டியாக இருகுழுக்களாக பிரிந்து இரவு நேரத்தில் வண்டல் மண் எடுத்து செல்வதால் கோஷ்டி மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்ட நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிரடி உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் பூதப்பாண்டி காவல் நிலைய போலீசாரின் உதவியுடன் மோதலை தவிர்க்கும் விதமாகவும் சட்டவிரோதமாக இரவு நேரத்தில் இரு குழுக்களாக பிரிந்து வண்டல் மண் எடுத்து செல்வதில் ஈடுபட்ட 19 டெம்போக்களையும் 3 கனரக ஹிட்டாச்சி எந்திரங்களையும் பறிமுதல் செய்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வண்டல் மண் எடுப்பதில் நிலவிய போட்டி கோஷ்டி முதலாக உருவெடுக்காமல் தடுத்த போலீசாருக்கும் ரகசிய தகவல் கிடைக்கப்பெற்றதும் தாமதிக்காமல் அதிரடி நடவடிக்கை எடுத்து உத்தரவிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் பாசனத்துறை தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். இரவு நேரங்களில் சட்டவிரோதமாக வண்டல் மண் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வாகனங்களை அரசுடமையாக்கும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்பதோடு வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை சார்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் 
கேபி.தமிழ்வாணன்
நாகர்கோவில்