சர்வதேச சுற்றுலாதளத்தில் கட்டண கழிப்பறையில் - வசூல் கொள்ளை
02 April 2025
பண்டிகை கால விடுமுறையொட்டி பல்வேறு மாநிலங்களில் சுற்றுலா பயணிகள் கன்னியாக்குமரி கடற்கரைக்கு வருகை புரிகின்றனர்.
இதில் நீண்ட தூர பயணிகள், வயதானவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் ஆண்கள் / பெண்கள் என வருகின்றனர்.
இவர்களுக்கு அவசர தேவைக்காக சிறுநீர் கழிப்பதற்காக, தமிழ்நாடு அரசு கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சியின் PUBLIC TOILET - பொது கழிப்பிடத்தில் சென்றால்... ஒரு நபருக்கு 10 ரூபாய் வசுலிக்கிறார்கள்.
10 என்பது கட்டணம் அதிகமாக உள்ளதே குறைவாக வசூல் செய்ய கூடாதா.? என கேட்டால்,
வசூலிப்பவர் நாங்கள் குத்தகைக்கு எடுத்துள்ளோம், இஷடம் என்றால் வா இல்லை எனில் வெளியே போ.. என மரியாதை குறைவாக திட்டுகிறார்கள்..
சம்மந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் தலையிட்டு கட்டண வசூல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
செய்தியாளர்
கேபி.தமிழ்வாணன்
நாகர்கோவில்