கொலை வழக்கு குற்றவாளிகள் இருவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு - இரா. ஸ்டாலின் IPS அவர்கள் நடவடிக்கை.
07 April 2025
🔶 கடந்த மார்ச் மாதம் கோட்டார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்தவரை தீ வைத்து எரித்து கொலை செய்த வழக்கில் கீழராமன்புதூர், தட்டான் விளை பகுதியை சேர்ந்த தங்கராஜா என்பவரது மகன் சுதன் (26), மற்றும் தோவாளை திருமலைபுரம் பகுதியைச் சேர்ந்த ரவிராஜ் என்பவரது மகன் சுகுணேஷ் (26) ஆகிய இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
🔶இவ்விரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள்* உத்தரவிட்டிருந்தார்கள்.
🔶இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் *திருமதி. அழகுமீனா IAS* அவர்கள் மேற்படி கொலை குற்றவாளிகள் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார்கள். உத்தரவின் படி கொலை குற்றவாளிகள் சுதன் மற்றும் சுகுணேஷ் இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
⭕மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கினை பாதுகாக்க இந்த நடவடிக்கையானது மேலும் தீவிரப்படுத்தப்படும்.
செய்தியாளர்
கேபி
தமிழ்வாணன்
நாகர்கோவில்