உளுந்தூர்பேட்டையில் விசிக நடத்தும் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மாநாட்டில் திமுக கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மது மற்றும் போதை ஒழிப்பு மக்கள் நல கூட்டமைப்பினர் கருப்பு
02 October 2024
உளுந்தூர்பேட்டையில் விசிக நடத்தும் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மாநாட்டில் திமுக கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மது மற்றும் போதை ஒழிப்பு மக்கள் நல கூட்டமைப்பினர் கருப்பு கொடிகாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்...
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இன்று மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது இதற்கிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்தப்படும் மது ஒழிப்பு மாநாட்டில் திமுக கலந்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தி மது மற்றும் போதை ஒழிப்பு மக்கள் நல கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராமதாசன் தலைமையில் உளுந்தூர்பேட்டை திருச்சி சாலையில் காமராஜர் சிலை அருகில் கருப்பு கொடி மற்றும் "திரும்பிப்போ திமுக" "கோபேக் திமுக" வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்...
இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டை நாங்கள் ஆதரிக்கிறோம். அந்த மாநாட்டிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வருவதை நாங்கள் வரவேற்கிறோம் மாநிலத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திராவிட முன்னேற்ற கழகம் நினைத்தால் உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த முடியும் அதை விட்டுவிட்டு மது ஒழிப்பு மாநாட்டில் அவர்கள் கலந்து கொள்வது கேளிக்கூத்தாக உள்ளது, ஆளுகின்ற திமுகவோ அல்லது இதற்கு முன்னர் ஆண்ட அதிமுகவோ இந்த மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது.
நான் இதுவரை 60 முறைக்கு மேல் இந்த மது ஒழிப்பிற்காக போராடி சிறை சென்றுள்ளேன் எங்கள் மது மற்றும் போதை ஒழிப்பு மக்கள் நல கூட்டமைப்பு சார்பில் போராடியவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட முறை சிறை சென்றுள்ளனர்.
நாங்கள் இந்த கொள்கைக்காக தொடர்ந்து போராடிக்கொண்டு தான் இருக்கின்றோம் அதனால்தான் திமுகவிற்கு எதிராக கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறோம் என்று கூறினார்...
உடனடியாக காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை அனுப்பி வைத்தனர்...
கொற்றவை செய்திகளுக்காக
இரா.வெங்கடேசன்
சப் எடிட்டர்