உளுந்தூர்பேட்டையில் உள்ள அருள்மிகு மாசபுரீஸ்வரர் கோவில் தீர்த்த குளம் ரூபாய் ஒரு கோடியே 45 லட்சம் மதிப்பில் சீரமைப்பு சட்டமன்ற உறுப்பினர் மணிகண்ணன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
19 February 2025
உளுந்தூர்பேட்டையில் உள்ள அருள்மிகு மாசபுரீஸ்வரர் கோவில் தீர்த்த குளம் ரூபாய் ஒரு கோடியே 45 லட்சம் மதிப்பில் சீரமைப்பு
சட்டமன்ற உறுப்பினர் மணிகண்ணன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள அருள்மிகு மாசபுரீஸ்வரர் கோவில் தீர்த்த குளம் ரூபாய் ஒரு கோடியே 45 லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ள நிலையில் அதற்கான பணியை உளுந்தூர்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மணிகண்ணன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். மிளகை உளுந்தாக்கிய மாசபுரீஸ்வரர் என்ற உளுந்தூர்பேட்டை நகருக்கு பெயர் காரணமாக அமைந்த அருள்மிகு மாசபுரீஸ்வரர் திருக்கோவிலின் தீர்த்த குளம் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக சேதம் அடைந்த நிலையில் உள்ளது குளத்தை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த படிக்கட்டுகள் உடைந்து சேதம் அடைந்த நிலையில் அதனை சீரமைத்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென கோரிக்கை எழுந்த நிலையில் மாசபுரீஸ்வரர் கோவில் தீர்த்த குளத்தை சீரமைக்க இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ரூபாய் ஒரு கோடியே 45 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது அதற்கான சீரமைப்பு பணியை உளுந்தூர்பேட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மணிக்கண்ணன் பூமி பூஜை செய்து குளத்தின் சீரமைப்பு பணியை தொடங்கி வைத்தார் இதில் நகராட்சி கவுன்சிலர்கள் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்....
சப் எடிட்டர் வெங்கடேசன்...