2009 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து உளுந்தூர்பேட்டை வழக்கறிஞர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்....

19 February 2025

2009 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து உளுந்தூர்பேட்டை வழக்கறிஞர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்....

கடந்த 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்திற்குள் புகுந்து வழக்கறிஞர்களை காவல்துறையினர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி வழக்கறிஞர்கள் கருப்பு தினமாக அனுசரித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அதன்படி இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வழக்கறிஞர் சங்கத்தினர் உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் இன்று பிப்ரவரி 19 கருப்பு தினத்தை கடைப்பிடித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் வழக்கறிஞர்கள் சேமநல கட்டணத்தை 30 ரூபாயிலிருந்து 120 ரூபாயாக உயர்த்தப்பட்ட நிலையில் வழக்கறிஞர்களின் சேமநல நிதியை ரூபாய் 10 லட்சத்திலிருந்து 25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் வழக்கறிஞர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வெளியிறுத்தி வக்கீல் சங்க தலைவர் தங்க ரமேஷ் தலைமையில் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் விடுபட்டனர் மேலும் இன்று முதல் வெள்ளிக்கிழமை வரை மூன்று நாட்கள் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்...

சப் எடிட்டர் இரா.வெங்கடேசன்