தங்களுக்கு விருது வழங்குவதில் பெருமை கொள்கிறது கொற்றவை நியூஸ்.
21 January 2025
திருவள்ளுவர் சிலையையும், வளர் தமிழ் நூலகத்தையும் திறந்து வைத்தார் தமிழக முதல்வர்.
கள ஆய்வுக்காக சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக முதல்வர் அழகப்பா பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டுள்ள வளர் தமிழ் நூலகம் மற்றும் அய்யன் திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை திறந்து வைத்து பார்வையிட்டார் உடன் முன்னாள் நிதி அமைச்சர் பா. சிதம்பரம், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன் சிவகங்கை மாவட்ட எம் பி கார்த்திக் சிதம்பரம், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
பின்னர் பேசிய அவர், வள்ளுவர், வள்ளலாரை களவாட ஒரு கூட்டமே முயற்சி செய்து வருவதாகவும், அவர்களை யாரும் கபளீகரம் செய்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுகொண்டார்.
முற்போக்கு சிந்தனைகள் வலுப்பெற பல்வேறு நூல்களை படிக்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
செய்தியாளர்:-
சிவ பிரசாத்.கா