அதிகாரத்தில் இருந்து கொண்டு, மக்கள் நலன் பற்றி கவலைப்படாமல் உள்ளவர்களே உண்மையான காது கேளாத, பேச இயலாத மாற்றுத்திறனாளிகள்...

26 September 2024

அதிகாரத்தில் இருந்து கொண்டு, மக்கள் நலன் பற்றி கவலைப்படாமல் உள்ளவர்களே
உண்மையான காது கேளாத, பேச இயலாத மாற்றுத்திறனாளிகள்...

சர்வதேச காதுகேளாதோர் தினம் - 2024, நிகழ்வில் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் பேச்சு...

சென்னை கிண்டியில் உள்ள MSME பவனில், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் நிர்வாகி, அன்புக்கரங்கள் இதழின் ஆசிரியர், தோழர் சு.அப்துல் லத்தீப் அவர்கள் ஏற்பாடு செய்து இருந்த நிகழ்வில் முன்னாள் மாற்றுத்திறனாளிகளின் நலத்துறை இயக்குனர் ஐயா K.தீனதயாளன் IAS ( Rtd ) அவர்கள் தலைமையில் நடைபெற்றது, 

சிறப்பு அழைப்பாளர்களாக தொழிலாளர் வளர்ச்சி நிறுவன இயக்குனர் திரு.சுரேஷ் பாபுஜி, தமிழக அரசு நலத்துறை அமைச்சகம் சார்பில் திரு.G.ரவீந்திரநாத் சிங், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.ஆர்.பாலாஜி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் திரு கா.வெங்கடேஷ், திருச்சி சாந்திவனம் மனநல காப்பகம் இயக்குனர் தோழர் அரசப்பன் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்கள்...

தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் பேசுகையில்....  மாண்புமிகு முதல்வர் அவர்கள் தான் உங்கள் துறையின் அமைச்சர்,  ஒரு முதல்வரின் கீழ் இயங்கும் துறையில் நீங்கள் உங்கள் தேவைகளை பெற்றுக் கொள்ள முடியவில்லை என்றால், உங்கள் தேவைகள் எப்போது நிறைவேற்றப்படும் ? முதல்வரின் கீழ் இயங்கும் துறையில் இந்த நிலை என்றால், உங்கள் தேவைகளை அவருடைய கவனத்திற்கு நீங்கள் சரியாக கொண்டு செல்லவில்லை என்பதே பொருள்,  உங்கள் கோரிகைகளை தமிழ்நாடு பத்திரிகையாளர்  சங்கம், அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல உதவி செய்யும்,  உங்கள் கோரிக்கைகளை பல முறை எடுத்துச் சொல்லியும், அதைப்பற்றி கவலைப்படாமல் பதவியிலும், அதிகாரத்திலும் இருப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள்தான் உண்மையான மாற்றுத் திறனாளிகள் .... என்று பேசினார்.

கொற்றவை செய்திகளுக்காக 
இரா.வெங்கடேசன், சப் எடிட்டர்