கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த அடரி -சேலம் தேசிய நெடுஞ்சாலையில், வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடு அமைந்துள்ளது. இந்த காப்பு காட்டில், மான்கள் வேட்டையாடப்படுவதாக, வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்டதில், சிறுபாக்கம் கிராமத்தை சேர்ந்த சாமுவேல், கள்ளக்குறிச்சி மாவட்டம் பொட்டியம் கிராமத்தை சேர்ந்த ரவி மற்றும் சிறுபாக்கம் கிராமத்தை சேர்ந்த அஜித் ஆகிய மூவர் என்பது தெரிய வந்தது. இந்நிலையில் சாமுவேலை வனத்துறை அதிகாரிகள் கைது செய்த நிலையில், ரவியின் வீட்டில் சோதனை செய்தபோது, வீட்டில் உரிமை இல்லாத மூன்று நாட்டு துப்பாக்கிகள், மூன்று பட்டாக்கத்திகள், மற்றும் வேட்டையாட பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய ரவி, அஜித் ஆகிய இருவரையும் வனத்துறை அதிகாரிகள் வலைவீசி தேடி வருகின்றனர். இவர்கள் மூவர் மீதும் ஆத்தூர், கள்ளக்குறிச்சி காவல் நிலையங்களில் ஏற்கனவே வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது...
கொற்றவை செய்திகளுக்காக
இரா.வெங்கடேசன், சப் எடிட்டர்