உளுந்தூர்பேட்டையில் 7 அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல்துறையினர் 3500 ரூபாய் அபராதம்...
23 September 2024
உளுந்தூர்பேட்டையில் 7 அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல்துறையினர் 3500 ரூபாய் அபராதம்...
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி பகுதியில் அடிக்கடி சாலை விபத்தில் நடைபெற்று வரும் நிலையில் தடை செய்யப்பட்ட பகுதியில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை அகற்றிவிட்டு பேருந்துகளை இயக்கிய 7 பேருந்து ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை..
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி பகுதியில் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் சென்னையிலிருந்து உளுந்தூர்பேட்டை நகரத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களும், புறவழி சாலை வழியே ஒரு வழி பாதையில் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு சுங்கச்சாவடி வழியே உளுந்தூர்பேட்டை நகரத்திற்குள் வாகனங்கள் சென்று கொண்டிருந்த பாதை அடைக்கப்பட்டு அந்த பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது இந்த நிலையில் தடை விதிக்கப்பட்ட பகுதியில் இருந்த தடுப்புகளை எடுத்துவிட்டு அரசு பேருந்து ஓட்டுநர்கள் சிலர் விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் இருந்து உளுந்தூர்பேட்டைக்கு புதன்கிழமை மாலை நேரடியாக வாகனங்களை ஓட்டிச் சென்றனர் இது பற்றி உடனடியாக உளுந்தூர்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் தடுப்புகளை எடுத்துவிட்டு சுங்கச்சாவடி பகுதியில் இருந்து உளுந்தூர்பேட்டைக்குள் சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்த முயன்ற பொழுது அதில் 7 அரசு பேருந்துகள் நிற்காமல் சென்றது இதையடுத்து அந்த 7 பேருந்துகளையும் உளுந்தூர்பேட்டை பூ.மாம்பாக்கம் சாலையில் உளுந்தூர்பேட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளர் முருகானந்தம் தடுத்து நிறுத்தி ஒவ்வொரு பேருந்துக்கும் தலா ரூபாய் 500 வீதம் 3500 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தார். உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி பகுதியில் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்பட்டு தொடர்ந்து உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் சுங்கச்சாவடியில் இருந்து உளுந்தூர்பேட்டை நகரத்திற்குள் செல்லும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளதை அறிந்தும் அதில் உள்ள தடுப்புகளை அகற்றிவிட்டு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தடை செய்யப்பட்ட பகுதியின் வழியாக வாகனங்களை ஒட்டி செல்வது சட்டப்படி குற்றம் என்றும் தொடர்ந்து இதை செய்தால் போக்குவரத்து கழகத் துறையின் அதிகாரிகள் மூலம் வாகன ஓட்டிகளுக்கும் நடத்துனர்களுக்கும் துறை ரீதியான நடவடிக்கைக்கு போக்குவரத்து போலீசார் பரிந்துரை செய்வார்கள் என்று எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்...
கொற்றவை செய்திகளுக்காக
இரா.வெங்கடேசன்
சப் எடிட்டர்