ஐடி ஊழியர் செய்த தரமான செயல்.. புக் செய்த சீட்டை ஆக்கிரமித்த பயணிகள்!

17 March 2025

 


யெஸ்வந்த்பூர் - கன்னூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் தட்கலில் டிக்கெட் புக் செய்திருந்த போதும் கேரள பயணியின் இருக்கையை முன்பதிவில்லா டிக்கெட்டை எடுத்த பயணிகள் ஆக்கிரமித்துள்ளனர். இது குறித்து டிக்கெட் பரிசோதகர் உள்பட பலரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து கேரளாவை சேர்ந்த அந்த பயணிக்கு ரூ.30,000 வழங்க ரயில்வேக்கு கோர்ட் உத்தரவிட்டு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.


ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் சமீப காலமாக எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது ரயில் சீட்களை பிற பயணிகள் ஆக்கிரமிப்பதுதான். முன்பதிவு செய்த பெட்டிகளில் முன்பதிவு இல்லாத ஓபன் டிக்கெட் வைத்து இருக்கும் பயணிகள் வந்து ஆக்கிரமித்துக்கொள்ளும் நிகழ்வு அடிக்கடி நடைபெறும் சம்பவங்களில் ஒன்றாக இருக்கிறது.


ஏசி பெட்டிகளில் கூட உரிய டிக்கெட் இல்லாத பயணிகள் ஆக்கிரமித்துக்கொள்வதால் பல மாதங்களுக்கு முன்பே டிக்கெட் புக் செய்து ரிசர்வ் செய்து வைத்து இருந்த பயணிகள் தவிக்கும் நிலை உள்ளது. அதிலும் வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. போனால் போகட்டும் என இடம் கொடுப்பது போலத்தான் ரிசர்வேஷன் செய்த பயணிகளுக்கே டிக்கெட் இல்லாமல் பயணிகள் இடம் கொடுக்கும் நிலை இருப்பதாக பயணிகள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

இதையடுத்து ஐஆர்சிடிசி பாலக்காடு மற்றும் பெங்களூர் டிவிஷனிலும் புகாரளித்துள்ளார். இரண்டிலுமே உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த ஜெம்ஷீத், மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் அணுகியுள்ளார். தனக்கு 4 லட்சம் ரூபய் இழப்பீடாக அளிக்க வேண்டும் என்று அவர் முறையிட்டுள்ளார். இந்த மனு மீதான விசாரணையின் போது பெங்களூர் டிவிஷன் ரயில்வே அதிகாரிகள் ஆஜராகவில்லை.