பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளை கொண்ட அமைப்பு பிரிக்ஸ் ஆகும். உலகளாவிய வர்த்தகப் பரிவர்த்தனைக்கு அமெரிக்க டாலரே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் உலக நிதிசார் அமைப்பில் பல ஆண்டுகளாக அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக டாலருக்கு மாற்றாக தங்கள் நாட்டு பணத்தின் மூலமே பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முன்னெடுப்புகளைத் தொடங்கி வருகின்றன.