டிரம்ப் இறங்கிய ரியல் எஸ்டேட் ப்ரோக்கர்.. மாஸ்டர்மைண்ட்?

19 February 2025

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இடையே சவுதி அரேபியாவில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. உக்ரைன் போரை முடிவிற்கு கொண்டு வருவதற்கான ஆலோசனைகள் நடக்க உள்ளன. டிரம்ப் புடின் ஆகியோர் சமீபத்தில் தொலைபேசியில் உரையாடினர். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை உடனடியாகத் தொடங்க இரண்டு பேரும் ஒப்புக்கொண்டனர். டிரம்ப் இதோடு நிற்காமல்.. ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையும் நடத்த உள்ளார்.



உக்ரைன் போர் கிட்டத்தட்ட 3ம் உலகப்போர் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் அதை முடிவிற்கு கொண்டு வர டிரம்ப் திட்டமிட்டு உள்ளார். இந்த நிலையில்தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினைச் சந்தித்து ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார். அதற்கு முன் புடின் உடன் பேச்சுவார்த்தை நடத்த அவர் தனது வெளியுறவுத்துறை செயலாளரை அனுப்பவில்லை. அதேபோல் வெளியுறவு அதிகாரிகள் யாரையும் அனுப்பவில்லை. அதற்கு பதிலாக டிரம்ப் தனது தனிப்பட்ட நண்பரும், கோல்ஃப் நண்பரும், ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளருமான, ப்ரோக்கருமான் ஸ்டீவ் விட்காஃப்பை அனுப்பினார்.


விட்கோப்பை தனது மத்திய கிழக்கு தூதுவராக நியமித்துள்ளார் டிரம்ப். ரியல் எஸ்டேட் துறையில் பெரிய நிறுவனங்கள் இடையே டீலிங்கை முடிக்க.. கஷ்டமான ஒப்பந்தங்களை க்ளோஸ் செய்ய.. கார்ப்ரேட் நிறுவனங்கள் இடையே பேரங்கள், அமைதி பேச்சுவார்த்தைகளை செய்ய இவரை களமிறக்குவது பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் இடையே பிரபலம். பேச்சுவார்த்தைக்கு பெயர் போன ஸ்டீவ் விட்காஃப்பை இதன் காரணமாகவே டிரம்ப் களமிறக்கி உள்ளார்.

கிட்டத்தட்ட 3ம் உலகப்போர் உருவாக்காமல் தடுக்க முக்கிய காரணியாக ஸ்டீவ் விட்காஃப் இருக்க போகிறார். இதன் மூலம் ஏறக்குறைய மூன்று ஆண்டுகாலப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்க உள்ளனர். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினைச் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திக்க உள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையிலான சந்திப்பு சவுதி அரேபியாவில் நடக்க உள்ளது. இந்த அமைதி பேச்சுவார்த்தை மூலம் உக்ரைன் - ரஷ்யா போர் முடிவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா - ரஷ்யா இடையே 1960களில் நடைபெற்ற பனிப்போருக்கு பின்பாக மிக மிக மோசமான மோதல் தற்போது ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு அமெரிக்கா, ரஷ்யா இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் உக்ரைன். உக்ரைன் நேட்டோ படையில் இணைய விரும்பியது. இதற்காக முயற்சிகளை செய்தது