சோழவந்தானில் ஆக்கிரமிப்புகளை முழுவதுமாக அகற்ற வேண்டும் நகர் நல அமைப்பினர் அரசுக்கு கோரிக்கை

26 September 2024

சோழவந்தானில் ஆக்கிரமிப்புகளை முழுவதுமாக அகற்ற வேண்டும் நகர் நல அமைப்பினர் அரசுக்கு கோரிக்கை 

மதுரை மாவட்டம் சோழவந்தானில்  ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெருக்கடியும் வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுவதாகவும் இதற்கு காரணமாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ச்சியாக அரசுக்கு கோரிக்கை வைத்த நிலையில் நெடுஞ்சாலை துறை மற்றும் சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் செப்டம்பர் 26 இல் ஆக்கிரமிப்புகள் முழுவதுமாக அகற்றப்படும் என சமூக வலைதளங்கள் மூலமாகவும் ஒலிபெருக்கி மூலமாகவும் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது 

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்கள் தாமாக முன்வந்து பல இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர் இது சம்பந்தமாக சோழவந்தான் நகர் நல அமைப்பினர் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர் 

கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த  அமைப்பின் நிர்வாகிகள் கூறுகையில்

 சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்பு காரணமாக பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு வந்த நிலையில் ஆக்கிரமிப்புகள்  அனைத்தும் செப்டம்பர் 26 அன்றுஅகற்றப்படும் என நெடுஞ்சாலை துறையும் பேரூராட்சி நிர்வாகமும் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கதாகும்

  இந்த அறிவிப்பினை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனத்தினர் தங்கள் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை தாமாக முன்வந்து கடந்த இரண்டு நாட்களாக எடுத்து வருகின்றனர்

 இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை துறையினரும் பேரூராட்சி நிர்வாகமும் ஆக்கிரமிப்பை அகற்றுவதில் பாரபட்சம் காட்டாமல் சோழவந்தானின் 18 வார்டுகளிலும் முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்  தொடர்ந்துஆக்கிரமிப்பை அகற்றிய பின்பு மீண்டும் ஆக்கிரமிப்பில் ஈடுபடாதவாறு தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் ஆக்கிரமிப்பை எடுக்கும் போது அரசியல்வாதிகள் தலையீடு இல்லாமல் நடுநிலையோடு ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று கூறினார்...

கொற்றவை செய்திகளுக்காக 
இரா.வெங்கடேசன், சப் எடிட்டர்