வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் ஒருவர் இறந்ததால் பரபரப்பு!!

27 March 2025

கோவை மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள பூண்டி அடிவாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்ட வர் கோயில் உள்ளது. அடிவாரத்தில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள 7 வது மலையில் சுயம்புலிங்க சுவாமி உள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் முதல் சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்துள்ளனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலையில் இருந்து வந்த சிவா (வயது 45)என்பவர் நண்பர்களுடன் 7வது மலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி 3வது மலைக்கு கிழே இறங்கும் போது மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தர்.டோலி கட்டி கிழே கொண்டு வந்து பரிசோதித்த போது மரணம் அடைந்தது தெரியவந்தது.கடந்த ஆண்டும் மூன்று பேர் மரணமடைந்தார்கள்.


இதைப்பற்றி இன்று நேரில் ஆய்வு செய்தோம். மலையேறும் பக்தர்களுக்கு வேண்டுகோள் பதாகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது.அதில் உரிய உடற்தகுதி உள்ளவர்கள் மட்டுமே ஏறவேண்டும்,சர்க்கரை வியாதி ,உயர் இரத்த அழுத்தம், இதயம் பலவீனமானவர்கள் மலையேற வேண்டாம் என்று அறிவுறுத்துகின்றனர்.மேலும் ஒரு மருத்துவர் தலைமையில் இரண்டு செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.பரிசோதனை செய்து கொள்ள மற்றும் மருத்துவ உதவிக்கு அத்தோடு இரண்டு ஆம்புலன்ஸ் அவசர காலத்தில் உதவிக்கு நிறுத்தி உள்ளனர். மலையேறும் பக்தர்களை வனத்துறை சார்பில் தீவிர சோதனைக்குப் பிறகே மேலே செல்ல அனுமதிக்கின்றனர்.மேலும் கோவில் வளாகத்தில் இடைவிடாமல் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை அறிவிப்புகள் செய்யப்படுகிறது.மலையில் போதுமான அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. சீசன் காலத்தில் மட்டுமே ஆதிவாசிகள் மூலம் மட்டுமே குடிநீர், சுக்கு காபி ,தர்பூசணி மற்றும் பிஸ்கட் விற்பனை செய்யப்படுகிறது.அடர் வனப்பகுதி என்பதால் இரவு நேரத்தில் டார்ச் லைட் இல்லாமல் மேலே செல்ல முடியாது.


புதிதாக மலை ஏறுபவர்கள் தொடர்ச்சியாக பலமணி நேரம் நடப்பதாலும் ,நீர்ச்சத்து குறைவதும், அதீத ஆர்வம் இவையே விலைமதிப்பற்ற உயிரை இழக்க நேரிடுகிறது.எனவே அரசின் அறிவுறுத்தல் மற்றும் உடல் தகுதியை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே மலையேறவேண்டும்.