வள்ளிக்கும்மி அரங்கேற்ற விழாவில் கின்னஸ் சாதனை புரிந்த பெண்களுக்கு பாராட்டு விழா- முதல்வர் மு க ஸ்டாலின்
09 April 2025
கொங்குநாடு கலைக்குழு ,கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கடந்த ஆண்டு பெருந்துறையில் 16 ஆயிரம் பெண்கள் பற்கேற்ற வள்ளிக்கும்மி நிகழ்ச்சி நடைபெற்றது.இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.இதில் பங்கேற்ற பெண்களுக்கு பாராட்டு விழா கோவை கொடீசியா மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் நாடு முதல்வர் மு க ஸ்டாலின் பங்கேற்று வள்ளிக்கும்மி நடனத்தை பார்வையிட்டு உறையாற்றினார்.
பெண்களுக்கான ஆட்சி:-
வள்ளிக்கும்மி நடனத்தில் பங்கேற்ற 16 ஆயிரம் பெண்களுக்கும் எனது பாராட்டு க்கள். வாழ்த்துக்கள். ..கலக்கிட்டீங்க. ..
பெண்கள் என்றாலே சாதனைதான் .இந்த ஆட்சி பெண்களுக்கான ஆட்சி என்பது அனைவருக்கும் தெரியும்.
நான் ஆட்சி பொறுப்பை ஏற்பதற்கு முன்பு தேர்தலில் வெற்றி பெற்றவுடன் பேரறிஞர் அண்ணா ,கலைஞர் ஆகியோர் நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினேன்.அங்கு பத்திரிகையாளர்கள் என்னை சூழ்ந்து கொண்டு மக்களுக்கு என்ன சொல்லப் போகிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்கள். நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. ஒன்றே ஒன்று அழுத்தமாக சொல்ல விரும்புகிறேன்.
என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்ல,வாக்களிக்க தவறியவர்களுக்கும் சேர்த்து இந்த ஆட்சி நடைபெறும் என்றேன்.வாக்களித்தவர்கள் மகிழ்ச்சி அடையவேண்டும்.வாக்களிக்காதவர்கள் இப்படி பட்டவருக்கு வாக்களிக்காமல் தவறி விட்டோமே என்று வருத்தப்படவேண்டும்.அந்த வகையில் நிச்சயமாக எங்கள் ஆட்சி இருக்கும் என்று உறுதியாகச் சொன்னேன்.அப்படித்தான் இந்த மேற்கு மண்டலத்திற்கும் ஏராளமான திட்டங்களை நமது அரசு செய்து வருகிறது. நாங்கள் உங்களது நன்மதிப்பை பெற்று இருக்கிறோம். அதனால் தான் 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக 40க்கு 40 என்ற வெற்றியை பெற்றது. இது நமது ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று. இதே போல 2826 சட்ட மன்ற தேர்தலிலும் வெல்வோம் அது தொடரும்.
தமிழ் நாட்டை வஞ்சி க்கும் மத்திய அரசு.
பிரதமர் மோடி தலைமையிலான மோடி அரசு, நமது ஆட்சி போல் இல்லாமல் வாக்களிக்காத தமிழ் நாட்டை வஞ்சிக்கிறது.இவர்களுடைய வஞ்சனையும் கடந்து வளர்ச்சியில் தமிழ் நாடு அனைத்து துறைகளிலும் முதல் இடத்தில் இருக்கிறது. தமிழ் நாட்டிற்கு முறை யாக நிதி ஒதுக்கி உரிய திட்டங்களை செய்து தரும் மத்திய அரசு அமைந்து இருந்தால் உலகளவில் நாம் தான் முதலிடத்தில் இருப்போமஆகியோர்ர்.
தொகுதி மறுசீரமைப்பு
தொகுதி மறுசீரமைப்பில் தமிழ் நாடு உள்ளிட்ட மாநிலங்கள் பாதிக்கப்படகூடாது என்று பிரதமர் மோடியை உறுதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். தொகுதி மறுசீரமைப்பு பற்றி சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு, தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கட்சி தலைவர் களை அழைத்து விவாதித்த உள்ளோம்.7 மாநில முதல்வர் துணை முதல்வர்கள் பங்கேற்ற கூட்டத்தில் தீர்மானம் ஒன்று நறைவேற்றி பிரதமரை சந்திக்க நேரம் கேட்டோம். இதுவரை ஒப்புதல் தரவில்லை. தமிழ் நாட்டிற்கு வரும் நீங்கள் இதை தெளிவுபடுத்தவேண்டும் கோரிக்கை வைத்தேன். ஆனால் மக்களுடைய முக்கிய பிரச்சினைகளுக்கு பதில் சொல்லாமல் தவிர்ப்பவர்களை நாம் என்ன செய்யமுடியும்? வேறு வழியில்லை. தமிழ் நாட்டை தவிர்க்க கூடிய பா.ஜனதாவுக்கு மீண்டும் தமிழ்நாட்டில் இடம் இல்லை என்ற பதிலைதான் வரும் தேர்தலில் தமிழ் மக்கள் வழங்க வேண்டும்.
மீனவர் பிரச்னை
பிரதமர் இலங்கையில் இருந்து அரை மணி நேரத்தில் இராமேஸ்வரம் வருகிறார். பாலத்தை திறந்து வைக்கப் போகிறார்.இலங்கையில் நம்முடைய மீனவர்கள் துன்பத்திற்கு ஆளாகக்கூடிய அந்த துயரத்திற்கு ஒரு முடிவு கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி எ.வா வேலு மு.சாமிநாதன் கயல்விழி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ரா சா கொங்கு நாடு மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.