பரந்தூர் விமான நிலையம் கட்டுவதற்கான ஆதாரத்தை காட்டுங்கள் என் முன்னிலையில் இலவசமாக எழுதி தருகிறோம்!!
31 January 2025
பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்துவதில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அந்நிறுவனம் மறுத்துள்ளது. இதே போல பண்ணூர், திருப்பந்தியூர் மற்றும் திருமேனி குப்பம் பகுதியில் எந்த நிலமும் இல்லையென தெரிவித்துள்ளது.
ஆதாரம் காட்டுங்கள் நிலத்தை இலவசமாக எழுதி தருகிறோம்
சென்னைக்கு அருகே புதிய விமான நிலையம் அமைக்க மத்திய முடிவு செய்துள்ளது. இதற்காக பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த் நிலையில் தவெக தலைவர் விஜய் நேரடியாக பரந்தூர் பகுதிக்கு சென்றார்.
அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் பரந்தூர் விமான நிலையம் அமைக்க மாநில அரசு, மத்திய அரசு இவ்வளவு திட்டமிடுகிறது என்றால். உள்ளுக்குள் வேறு ஏதோ ஒரு காரணம் இருக்கும் என தெரிவித்திருந்தார்.