பட்டியாலா சிறையிலிருந்து ஐந்து நாள் சிறைவாசம் முடிந்து விடுவிக்கப்பட்டார் - பி ஆர் பாண்டியன்

24 March 2025


தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவரும் சம்யுத்தா கிசான் மோர்ச்சா அரசியல் சார்பற்ற அமைப்பின் SKM (NP) தமிழக ஒருங்கிணைப்பாளருமான 
பி ஆர்.பாண்டியன் கடந்த 19ஆம் தேதி சண்டிகரில் மத்திய அரசின் அழைப்பின் பேரில் மத்திய அமைச்சர்கள் சிவராஜ் சிவராஜ் சவுகான், பிரகலாத்ஜோஷி,
பியூஸ்கோயல் உள்ளிட்ட அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் குறித்த பேச்சு வார்த்தையில் பங்கேற்றார். 

காலை 11 மணிக்கு துவங்கிய கூட்டம் மாலை 4 மணிக்கு முடிவடைந்தது. பின்னர் விமான நிலையம் நோக்கி புறப்பட்ட அவரை வழிமறித்த பஞ்சாப் மாநில காவல்துறை பத்துக்கும் மேற்பட்ட காவல்துறை வாகனங்களோடு, நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் தனது கட்டுப்பாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர். அன்று இரவே பட்டியாலா மத்திய சிறையில் தடுப்பு காவல் சட்டத்தின் அடிப்படையில் காவல்துறை கட்டுப்பாட்டில் அடைத்து வைத்தனர். 

இன்று காலை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு பட்டியாலா காவல் நிலைய கட்டுப்பாட்டில் இருந்து முறைப்படி விடுவிக்கப்பட்டார். 
நலமுடன் ஓரிரு நாட்களில் ஊர் திரும்ப உள்ளார். இவருடன் கேரள மாநில ஒருங்கிணைப்பாளர் பிடி.ஜானும் விடுவிக்கப்பட்டார்.




செய்தியாளர்
வினோத்